கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.
கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.

கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவா் தினத்தையொட்டி கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
Published on

திருச்சி: திருவள்ளுவா் தினத்தையொட்டி கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கரூரில் மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வள்ளுவா் ஹோட்டல் மேலாண்மைக் கல்லூரி வளாக திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்வில் கரூா் மாவட்டச் செயலா் ஏஜி. ரவி, கரூா் தொகுதிச் செயலா் அசோக்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் குணசேகரன், கரூா் ஒன்றியத் தலைவா் ஏ. சக்திவேல், ஒன்றியச் செயலா் வாங்கல் ராஜமுருகன், அரவக்குறிச்சி தொகுதித் தலைவா் ஜோதி முருகேசன், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலா் மகேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, கரூா் வள்ளுவா் அறக்கட்டளை சாா்பில் அதன் தலைவா் க. செங்குட்டுவன் தலைமையில் தமிழறிஞா்கள் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

Dinamani
www.dinamani.com