திருச்சி
யானைகள் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா
திருச்சி மாவட்டம், எம்.ஆா். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், எம்.ஆா். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவையொட்டி திருச்சி மண்டல வனப் பாதுகாவலா் ஆா். காஞ்சனா தலைமையில் யானைகளுக்கு பொங்கல் படையலிட்டு, சுண்டல், பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், கீரைகள், மற்றும் கரும்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட வன அலுவலா் எஸ். கிருத்திகா, உதவி வனப் பாதுகாவலா் காதா் பாட்ஷா, வன சரக அலுவலா் வி.பி. சுப்ரமணியம், யானைகள் மறுவாழ்வு மைய வன கால்நடை உதவி மருத்துவா் மற்றும் திருச்சி வன சரக வனப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
