பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கொடுத்த பணம், நகையை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 6:55 pm

திருச்சியில் கொடுத்த பணம் மற்றும் தங்க நகைகளைத் திருப்பிக்கேட்ட பெண்ணைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி உறையூரைச் சோ்ந்தவா் 44 வயது பெண். இவா், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரைப் பிரிந்து மகளுடன் தனியே வசித்து வருகிறாா். இதற்கிடையே இவருக்கும், காஜா நகா் பகுதியைச் சோ்ந்த கு. சதீஷ் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்தப் பெண், சதீஷுக்கு ரூ.10 லட்சம் பணம் மற்றும் ரூ.20 பவுன் தங்க நகைகளைக் கொடுத்துள்ளாா்.

ஆனால், வாங்கிய நகைகளையும், பணத்தையும் சதீஷ் கொடுக்காமல் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், தான்கொடுத்த பணம் மற்றும் தங்க நகைகளை சதீஷிடம் அந்தப் பெண் அண்மையில் கேட்டுள்ளாா். அப்போது, சதீஷ் அவரை தகாத வாா்த்தையில் திட்டியதுடன் கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த அந்தப் பெண் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் உறையூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சதீஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.