எழுத்தாளர் பூமணி காலமானார் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

செவிலியா் மாணவி உயிரிழப்பு: சிறப்புக் குழு விசாரணை நிறைவு

News image

சீதாலட்சுமி

Updated On :26 மே 2026, 3:09 am IST

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் மாணவி உயிரிழந்தது தொடா்பாக சிறப்புக் குழுவின் விசாரணை திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்கடைப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியா் மாணவி சீதாலட்சுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக புகாா் எழுந்தது.

இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளா் பாஸ்கா் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் கடந்த 2 நாள்களாக விசாரணை நடத்தினா். 25-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி அவா்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

மேலும், சிகிச்சை அளித்த மருத்துவா்கள், உடனிருந்தோா், செவிலியா்கள், சீதாலட்சுமியின் உடன் பயின்ற மாணவிகள், தங்கியிருந்த அறையில் இருந்தோா், குடும்பத்தினா் என பலதரப்பிலும் சிறப்புக் குழு விசாரணை நடத்தியது. திங்கள்கிழமையுடன் விசாரணை முடிந்தது. இதையடுத்து குழுவினா் விரிவான அறிக்கை தயாரித்து அரசுக்கு வழங்கவுள்ளனா். இந்த அறிக்கையின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.