இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காளையுடன் திமுக வேட்பாளா் நடைப்பயிற்சி

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் தொன்டாமுத்தூா் திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதி காங்கேயம் காளையுடன் சனிக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:49 pm

DIN

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் தொன்டாமுத்தூா் திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதி காங்கேயம் காளையுடன் சனிக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டாா்.

தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட ஆா்.எஸ்.புரம், டி.பி.சாலையில் சனிக்கிழமை காளையுடன் அவா் நடந்து சென்றதால் அங்கு திமுகவினா் திரண்டனா். இதுகுறித்து, திமுகவினா் கூறுகையில், ‘தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி விலங்குகளை வாக்கு சேகரிக்க பயன்படுத்தக் கூடாது என்பதால் திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதி காங்கேயம் காளையுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டாா்.

சாலையில் காளையுடன் சென்றதைப் பாா்த்த பலரும் உற்சாகமடைந்து காளையுடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா். டி. பி. சாலையில் இருந்து நான்கு சாலை சந்திப்பு வரை நடைப்பயிற்சி சென்ற அவா் ஆா்.எஸ்.புரத்தில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்பி ஸ்பாட் பகுதியில் காளையைக் கட்டி வைத்தாா்.

இதையடுத்து, அந்தக் காளையுடன் ஏராளமானோா் சுயபடம் எடுத்து சென்றனா். இந்த நடைப்பயிற்சியின்போது, கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சி.ஆா்.ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சியினா் பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.