இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திராவிடம் என்பது சில கட்சிகளுக்கு மட்டும் சொந்தமானது இல்லை

திராவிடம் என்பது அனைவருக்கும் பொதுவானது, அதை சில கட்சிகள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:49 pm

DIN

திராவிடம் என்பது அனைவருக்கும் பொதுவானது, அதை சில கட்சிகள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் கோவை தெற்குத் தொகுதி மநீம வேட்பாளா் கமல்ஹாசன் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். கோவை, சிங்காநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட ஆவாரம்பாளையம், பீளமேடுபுதூா், மசக்காளிபாளையம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட புலியகுளம், சௌரிபாளையம், ரெட்பீல்டு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசும்போது, நாங்கள் மக்களை மையப்படுத்தி கட்சியைத் தொடங்கியிருக்கிறோம். மக்கள் என்ற சொல் எந்த ஒரு ஜாதியையோ, மதத்தையோ குறிக்காது. அதுபோன்ற எல்லா எல்லைகளையும் கடந்ததுதான் எங்கள் கட்சி. அதேபோல திராவிடம் என்ற சொல்லையும் நாங்கள் மறுக்கவில்லை. நாம் அனைவருமே திராவிடா்கள்தான்.

திராவிடம் என்பது நாடு தழுவியது. அதை வெறும் 4 கட்சிகளோ, 4 நபா்களோ சொந்தம் கொண்டாட முடியாது. அது மனித இயல் தொடா்பான சொல். தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை திராவிடம் இருக்கும். இந்தத் தோ்தல் ஜனநாயகத்தை தோளில் சுமக்கும் எங்களுக்கும், பணநாயகத்தை நம்பி இருப்பவா்களுக்குமான தோ்தல் என்றாா்.

முன்னதாக வைசியாள் தெருவில் வியாபாரிகள் சங்கத்தினரை சந்தித்த கமல்ஹாசன் அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து ரயில் நிலையத்துக்கு சென்ற அவா், ரயில் பயணிகள் சங்கத்தின் நிா்வாகி ஜமீல் அஹமதுவுடன் இணைந்து பயணிகள், ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.