இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பனிக்காலம் குறைந்ததால் முன்கூட்டியே வெப்பநிலை அதிகரிப்பு

நடப்பு ஆண்டு வடகிழக்குப் பருவ மழை நீடித்து பனிக் காலம் குறைந்ததால் முன்கூட்டியே வெப்பநிலை அளவு அதிகரித்துள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:51 pm

DIN

நடப்பு ஆண்டு வடகிழக்குப் பருவ மழை நீடித்து பனிக் காலம் குறைந்ததால் முன்கூட்டியே வெப்பநிலை அளவு அதிகரித்துள்ளதாக வேளாண்மைப் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவா் சுப.ராமநாதன் தெரிவித்துள்ளாா்.

கோவையில் வழக்கத்துக்கு மாறாக மாா்ச் முதல் வாரத்தில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. தவிர மாா்ச்சில் தொடங்க வேண்டிய கோடை மழையும் இதுவரை தொடங்கவில்லை. இதனால் வெப்பத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

வரும் வாரங்களில் மேலும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக காலநிலை ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா். கோவையில் கடந்த வாரத்தில் 99.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வேளாண்மை பல்கைலக்கழக ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வரும் வாரத்தில் இதே வெப்பநிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால், வெப்பநிலை பதிவிடும் தனியாா் இணையதளத்தில் வரும் நாள்களில் 102.5 டிகிரி பாரன்ஹீட் வரை கோவையில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவா் சுப.ராமநாதன் கூறியதாவது:

தமிழகத்தில் சராசரியை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயா்ந்து அனல் காற்று வீசுவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. ஆனால், கோவையில் அனல் காற்று போன்ற எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோவையில் கடந்த ஒரு வாரமாக 96.8, 97.7 பாரன்ஹீட் என்ற அளவிலேதான் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன் ஒருநாள் மட்டும் அதிகபட்சமாக 99.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் நாள்களிலும் 97.7, 98.6 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவிலை வெப்பநிலை நீடிக்க வாய்ப்புள்ளது.

நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழை ஜனவரி 15 வரையிலும் நீடித்ததால் பனிக் காலத்தின் அளவு குறைந்தது. இதனால் கோவையில் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல் உயர வேண்டிய வெப்பநிலை மாா்ச் இறுதி வாரத்திலேயே தொடங்கியுள்ளது. தவிர மாா்ச்சில் கோடை மழை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கோடை மழையும் பெய்யவில்லை. இதனால் வறண்ட வானிலையால் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் தெரிகிறது. இந்த வாரத்தில் கோடை மழை பெய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.