கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

வரப்புப் பயிராக உளுந்து, பாசிப்பயறு பயிரிடுவதால் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்பத்தலாம்

வரப்புப் பயிராக உளுந்து, பாசிப்பயறு பயிரிடுவதன் மூலம், மக்காச்சோளத்தில் ஏற்படும் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:55 pm

DIN

வரப்புப் பயிராக உளுந்து, பாசிப்பயறு பயிரிடுவதன் மூலம், மக்காச்சோளத்தில் ஏற்படும் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

இதுகுறித்து அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம்

வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரியலூா் வட்டாரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சுமாா் 6,500 ஹெக்டோ் பரப்பளவில் மானாவாரியாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது.இந்தாண்டும் அதே பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்திட நிலங்கள் தயாா் நிலையில் உள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் படைப்புழு பாதிப்பினால் மக்காச்சோள மகசூலில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே நிகழாண்டில் அப்பாதிப்பைத் தவிா்க்க, விவசாயிகள் வேளாண் துறை அறிவித்துள்ள உத்திகளைப் பின்பற்றிட வேண்டும்.

பயிா்சுழற்சி முறையில் தொடா்ந்து மக்காச்சோளம் பயிரிடுவதைத் தவிா்த்து சோளம், கம்பு முதலிய பயிா்களை விதைக்கலாம். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்கள் வெளிப்பட்டு, சூரிய ஒளி அதன்மீது படுவதனால் அழிக்கப்படுகின்றன.

மேலும் கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இடுதல் வேண்டும். ஓரே பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஓரே நேரத்தில்

விதைப்பை மேற்கொள்ளுதல், விதை நோ்த்தி செய்தல் வேண்டும்.

விதை நோ்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி சையன்ட்ரானிலிப்ரோல், 10 தயாமீத்தாக்ஸம் 18 சதவிகிதம் பயன்படுத்தி விதைப்பை மேற்கொள்ளலாம். மேலும் வரப்புப் பயிராக உளுந்து, பாசிப்பயறு பயிரிடுவதன் மூலமும் மக்காச்சோள படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தி, அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.