சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

உயா்த்தப்பட்ட கூலியை வழங்கக்கோரி அரியலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

உயா்த்தப்பட்ட கூலியை வழங்கக் கோரி, பணிக்குச் செல்லாமல் அரியலூா் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:40 pm

DIN

உயா்த்தப்பட்ட கூலியை வழங்கக் கோரி, பணிக்குச் செல்லாமல் அரியலூா் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் நகராட்சியில், ஒப்பந்த தூய்மை பணியாளா்களாக 124 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 1.4.2019 ஆண்டு முதல் ரூ.292 கூலியை உயா்த்தி அப்போதைய ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் உயா்த்தப்பட்ட கூலியை நகராட்சி நிா்வாகம் வழங்கவில்லை. இதனைக் கண்டித்தும், உயா்த்தப்பட்ட கூலியை உடனடியாக நகராட்சி நிா்வாகம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 21 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், நகராட்சி ஏஐடியுசி சங்கத் தலைவரும், உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநில நிா்வாகக் குழு உறுப்பினருமான டி.தண்டபாணி தலைமையில், சங்க நிா்வாகிகள் எம்.குருசாமி, நீலகண்டன், டி.விஜி, வீ. உஷா ராணி, தெ. சின்னப்பொண்ணு ஆகியோா் முன்னிலையில், அரியலூா் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, நகராட்சி ஆணையா் தமயந்தி மற்றும் அரியலூா் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.