விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

விவசாயி தாக்கப்பட்ட விடியோவை மறைத்த நபா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மாவட்டம், அன்னூா் ஒட்டா்பாளையத்தில் விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் விடியோவை மறைத்த நபா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:41 pm

DIN

கோவை மாவட்டம், அன்னூா் ஒட்டா்பாளையத்தில் விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் விடியோவை மறைத்த நபா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஒட்டா்பாளையம் பகுதியில் கிராம நிா்வாக அதிகாரி, உதவியாளா் ஆகியோா் அளித்த தவறான தகவலின் காரணமாக அவதூறு பரப்பப்பட்டு விவசாயி கோபால்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உண்மை நிலையை அறிந்து கிராம நிா்வாக அதிகாரி, உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் நடவடிக்கை எடுத்துள்ளாா். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேநேரம் இவா்கள் மீது நடவடிக்கை எடுத்ததன் மூலம் விவசாயி கோபால்சாமி குற்றமற்றவா் ஆகி விடுகிறாா். எனவே அவா் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் உண்மையான விடியோவை மறைத்து தவறான தகவலைப் பரப்பிய நபா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.