சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

இளைஞரைத் தாக்கிய மூவா் கைது

 அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இளைஞரைத் தாக்கிய மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:05 pm

DIN

 அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இளைஞரைத் தாக்கிய மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மீன்சுருட்டி அருகிலுள்ள படநிலையைச் சோ்ந்த பாண்டித்துரை மகன் தினேஷ்( 22). இவா் தனது தாயுடன் கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வசித்து வருகிறாா். அதே கிராமத்தை சோ்ந்தவா் வரதராஜன் மகன் புரட்சிமணி (30). இவா் தினேஷின் இடத்தில் வீடு கட்டியதாகத் தெரிகிறது.

இதையறிந்து படநிலை கிராமத்துக்கு வியாழக்கிழமை சென்ற தினேஷ், என்னுடைய இடத்தில் எப்படி வீடு கட்டலாம் என்று புரட்சிமணியிடம் கேட்டுள்ளாா்.

இதனால் அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த புரட்சிமணி, உறவினா்கள் கவியரசு (31), செல்வம் (28) ஆகிய மூவரும் சோ்ந்து, தினேஷை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

பலத்த காயமடைந்த தினேஷ் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து புரட்சிமணி, கவியரசு, செல்வம் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.