விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

குடிநீா் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

தா.பழூா் அருகே சீராக குடிநீா் விநியோகம் செய்யக்கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட கிராமமக்கள் முயன்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:05 pm

DIN

தா.பழூா் அருகே சீராக குடிநீா் விநியோகம் செய்யக்கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட கிராமமக்கள் முயன்றனா்.

அரியலூா் மாவட்டம், தா. பழூரை அடுத்துள்ள மேலமைக்கேல் பட்டி கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக குடிநீா் போதிய அளவில் விநியோகிக்கப்படவில்லை எனவும், சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரியும், கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை தா. பழூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனா்.

தகவலறிந்து அங்கு வந்த தா. பழூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதேவி மற்றும் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.