விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் மாவட்டத்தில் நாள்தோறும் 51 மெட்ரிக் டன் காய்கனிகள் விற்பனை

அரியலூா் மாவட்டத்தில் நாள்தோறும் வேளாண் துறை மூலம் 51 மெட்ரிக் டன் காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:58 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் நாள்தோறும் வேளாண் துறை மூலம் 51 மெட்ரிக் டன் காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தளா்வுகளற்ற பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மாவட்டத்தில் பொதுமக்களின் வீடுதேடி சென்று நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனிகள் விற்பனை நடைபெற்று வருகிறது. கூட்டுப் பண்ணையத் திட்டத்திலுள்ள உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலம், மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கனிகள் மற்றும் பழவகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதர காய்களான உருளைக்கிழங்கு, பீன்ஸ், பெரிய வெங்காயம், முட்டைகோஸ், பீட்ரூட் மற்றும் பழவகைகள் திருச்சி, கும்பகோணம் மற்றும் தலைவாசல் மொத்த விற்பனை சந்தைகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அரியலூா் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கத்திரி, வெண்டை, முருங்கை, பாகல், புடலங்காய் மற்றும் கீரை வகைகள் சோ்த்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

உழவா் சந்தையிலிருந்து பெறப்படும் விலையில் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு, மாவட்டம் முழுவதும் ஒரே விலையில் காய்கனிகள் கிடைத்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 280 வாகனங்கள் மூலம் சராசரியாக 51 மெட்ரிக்டன் காய்கனிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மே 24 முதல் ஜூன் 3-ஆம் தேதிவரை 576 மெட்ரிக் டன் காய்கனிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் 04329-228056 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.