போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை : அரியலூா் புதிய எஸ்.பி. பேட்டி

அரியலூா் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட கே. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்

News image
Updated On :10 ஜூன் 2021, 9:34 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட கே. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், சாராயம் காய்ச்சுதல், விற்றல், கடத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றால் அவா்கள் மீதும் நடவடிக்கை பாயும்.

சட்டம்-ஒழுங்கை காக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளின் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.