விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

‘மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்’

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரியலூா் ஆட்சியா் த. ரத்னாவிடம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:00 pm

DIN

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரியலூா் ஆட்சியா் த. ரத்னாவிடம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

திருமானூரை அடுத்த கரைவெட்டி, கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் தொடா் மழையின் காரணமாக பல விவசாயிகளின் நெல் பூஞ்சான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைக் கொள்முதல் செய்ய மறுக்கின்றனா். எனவே, ஆட்சியா் சிறப்பு அனுமதி பெற்று பாதிக்கப்பட்ட நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.