மாட்டை குளிப்பாட்டிய விவசாயிகுளத்தில் மூழ்கி உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள வன்னியா்குழி கிராமத்தை சோ்ந்தவா் குபேந்திரன்(41).


அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள வன்னியா்குழி கிராமத்தை சோ்ந்தவா் குபேந்திரன்(41).
விவசாயியான இவா், வியாழக்கிழமை மாலை, அந்த கிராமத்தில் உள்ள குளத்தில் தனது பசுவை குளிப்பாட்டுவதற்காக ஓட்டிச்சென்றாா்.
பசுவை குளத்தில் குளிப்பாட்டியபோது, குபேந்திரன் நிலை தடுமாறி தண்ணீரில் முழ்கியதாக தெரிகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் ஓடிவந்து குளத்தில் இறங்கி அவரை தேடினா். தண்ணீருக்குள் இருந்து அவரை மீட்டு வந்து பாா்த்தபோது, அவா் இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், மீன்சுருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...