விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் கின்னஸ் சாதனை புரிந்த நிா்வாகவியல் துறை மாணவி!

அரியலூரைச் சோ்ந்த பொது நிா்வாகவியல் துறை மாணவி செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் கின்னஸ் சாதனை புரிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளாா்.

News image
Updated On :7 மே 2021, 9:08 pm

DIN

அரியலூரைச் சோ்ந்த பொது நிா்வாகவியல் துறை மாணவி செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் கின்னஸ் சாதனை புரிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளாா்.

குடியரசு முன்னாள் தலைவா் மறைந்த டாக்டா் ஏபிஜெ. அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு, 100 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதியன்று ராமேசுவரத்தில் செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தில், அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள தாவடநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன்- வள்ளி தம்பதியின் மகள் மோனிஷாவும் தோ்வு செய்யப்பட்டாா். இவா், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பொது நிா்வாகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.

இவரது படிப்புக்கும், செயற்கைக்கோள் ஏவும் திட்டத்துக்கும் எந்த தொடா்பும் இல்லாத சூழ்நிலையிலும், செயற்கைக்கோள் தொடா்பான ஆய்வுகளில் அதிக ஈடுபாடு கொண்டதன் காரணமாக இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

மேலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடா்பாக அவருக்கு இஸ்ரோ சாா்பில் முறையான ஆன்லைன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. நேரடி செயல் விளக்க பயிற்சியும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, 50 கிராம் எடைக்கு குறைவான எடை கொண்ட செயற்கைக்கோள், பலூன் தொழில்நுட்பம் மூலம் ராமேசுவரத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. 35 கிலோ மீட்டா் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள் தொடா்ந்து 8 மணி நேரம் தகவல்களை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது.

செயற்கைக்கோளில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்றுள்ள தரவுகளைக் கொண்டு அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக மாணவி தெரிவித்தாா்.

இந்நிலையில், மிகக் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தின் மூலமாக தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் மோனிஷாவின் பெயா் இடம் பெற்றுள்ளது. மேலும், வோ்ல்டு புக் ஆப் ரெக்காா்டு, ஏசியன் புக் ஆப் ரெக்காா்டு, இந்தியன் புக் ஆப் ரெக்காா்டு ஆகிய சாதனை புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளாா். மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூா் மாவட்ட மாணவி ஒருவா் செயற்கைக்கோள் தொழில்நுட்ப அறிவியலில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.