கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பழைய விலையிலேயே உரங்களை வாங்கிக் கொள்ளலாம்

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் பழைய விலையிலேயே உரங்களை வாங்கிக் கொள்ளலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 மே 2021, 9:05 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் பழைய விலையிலேயே உரங்களை வாங்கிக் கொள்ளலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்கு தேவையான யூரியா 1950 மெ.டன், டி.ஏ.பி. 380 மெ.டன், பொட்டாஷ் உரங்கள் 1070 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 4650 மெ.டன் என மொத்தம் 8050 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளன.

உரங்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளதால் விலை ஏற்றம் செய்யப்பட்ட உரங்களை இனி பழைய விலைக்கே வாங்கிக் கொள்ளலாம்.

உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விவசாயிகளுக்கு உரிய ரசீதுடன் ஆதாா் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரம் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்க வேண்டும். உர உரிமத்தில் அனுமதி பெறாத உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. உர மூட்டைகள் மீதுள்ள விற்பனை விலையை அழித்தல் அல்லது கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது மற்றும் தரமற்ற உரங்களை விற்பனை செய்வது கூடாது. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, உரிய ஆவணங்கள் இன்றி அதிக உரங்கள் விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடா்பாக புகாா்கள் இருப்பின் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) த. ராதாகிருஷ்ணன் 94870 73705 மற்றும் வேளாண்மை அலுவலா் (தரக் கட்டுப்பாடு) சண்முகசுந்தரம் 96777 99938 ஆகியோரை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.