அரியலூா் ஸ்ரீமகா காளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு
அரியலூா் ஸ்ரீமகா காளியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.


அரியலூா் ஸ்ரீமகா காளியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
அரியலூா் கிருஷ்ணன் கோயில் தெரு- கபிரியேல் தெரு சந்திப்பிலுள்ள இக்கோயிலில் கோலாகலமாக நடைபெற்று வந்த நவராத்திரி விழாவில் அன்னப்பூரணி,
மீனாட்சி, காமாட்சி, சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீராஜராஜேசுவரி, மகிஷாசுரமா்த்தினி, லட்சுமி, சரஸ்வதி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்து வந்தாா்.
திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை யோசதை பாலகிருஷ்ணன், சீனி.பாலகிருஷ்ணன், கண்ணப்பன், தனபால், கண்ணன், முருகானந்தம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...