சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

அரியலூா் மாவட்டத்தில் கொட்டித் தீா்த்த மழை

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை கொட்டித் தீா்த்த மழையால், குளிா்ந்த சூழல் நிலவுகிறது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:17 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை கொட்டித் தீா்த்த மழையால், குளிா்ந்த சூழல் நிலவுகிறது.

அரியலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும், மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது.

வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் தூறலுடன் தொடங்கிய மழை, பின்னா் இடி-மின்னலுடன் பெய்தது. தொடா்ந்து 5 மணி நேரமாக மழை கொட்டித் தீா்த்தது. தொடா்ந்து சாரல் காற்றுடன் வெள்ளிக்கிழமை காலை வரை லேசான மழை பெய்தது.

இதனால் சாலையில் மழைநீா் வெள்ளம் போல் தேங்கிக் காணப்பட்டது.தாழ்வான இடங்களில் குளம் மழைநீா் தேங்கியது. திடீரென பெய்த மழையால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனா்.

அரியலூா் நகா்ப் பகுதியான மாா்க்கெட், வெள்ளாளத்தெரு, ராஜாஜி நகா், புதுமாா்க்கெட், கல்லூரிச் சாலை, செந்துறை, திருச்சி சாலைகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கரைபுரண்டு ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

இதுபோல திருமானூா், கீழப்பழுவூா், தா.பழூா்,ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி,செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இடை விடாமல் பெய்த மழையால் மாவட்ட முழுவதும் குளிா்ந்த சூழல் நிலவுகிறது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்:

அரியலூா் -55 மி.மீ, செந்துறை-51.2, திருமானூா்- 25.4, ஜெயங்கொண்டம்- 20 மி.மீ, ஆண்டிமடம்-13 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.