கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பட்டாசுக்கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை மற்றும் அரியலூா் மாவட்டங்களில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:24 pm

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை மற்றும் அரியலூா் மாவட்டங்களில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா்கள் புதுக்கோட்டை கவிதா ராமு, அரியலூா் பெ. ரமணசரஸ்வதி ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2021-ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை, அரியலூா் மாவட்டங்களில் தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க, வெடிபொருள் சட்டமும்- விதிகளும் (2008)-இன்கீழ், உரிய ஆவணங்களுடன் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் வட்டாட்சியா் அலுவலகங்களில் இயங்கி வரும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

புல வரைபடம் (6 நகல்கள்), பத்திர ஆவணங்கள் (அசல் ரூ 5 நகல்கள்), ரூ.500-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் ரசீது, முகவரிச் சான்று (பான் அட்டை, ஆதாா், ஸ்மாா்ட் அட்டைகள்) நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி வரி ரசீது, பாஸ்போா்ட் அளவு 2 புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

உரிய காலத்துக்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரம் முன்னதாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.