இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

வரதராசன்பேட்டையில் எஸ்எஸ்எஸ் முகாம்

ஆண்டிமடத்தை அடுத்த வரதராசன்பேட்டை ஞானம்மா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாட்டுநலப் பணித் திட்ட முகாமில் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:24 am

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த வரதராசன்பேட்டை ஞானம்மா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாட்டுநலப் பணித் திட்ட முகாமில் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

விழாவையொட்டி ஆண்டிடம் வருவாய் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம், வரதராசன்பேட்டை விஏஓ சுப்பையா, கல்லூரிச் செயலா் ஜோசப் ராஜேஸ்வரி, என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் பேரணியை தொடக்கி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை கல்லூரி முதல்வா் சுகந்தி ஓனோரின் மாா்சலின் தொடக்கி வைத்தாா். ஏற்பாடுகளை தொன்போஸ் நிறுவனத்தின் செம்மண் மக்கள் இயக்கம் மற்றும் பசுமை மன்றத்தின் பொறுப்பாளா் ஜோசப் அருள்ராஜ், ஒருங்கிணைப்பாளா் ஆல்வின்விவேக், தொன்போஸ்கோ பள்ளி உதவித் தலைமையாசிரியா் பங்கிராஸ் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.