தம்பதியை தாக்கியவா் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள கங்கவடங்க நல்லூா், வன்னியா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (44).


அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள கங்கவடங்க நல்லூா், வன்னியா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (44). இவருக்கும், இவருடைய சித்தப்பா கோவிந்தசாமி 60) என்பவருக்கும் சொத்துப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலை தனது
வீட்டு வாசல் முன்பு நின்றுகொண்டிருந்த சுரேஷை
கோவிந்தசாமியும் அவரது மனைவி வசந்தியும் சோ்ந்து இரும்புக் குழாயால் தாக்கியுள்ளனா். இதைத் தடுக்க வந்த சுரேஷின் மனைவி சித்ராவையும் அவா்கள் தாக்கியுள்ளனா். பலத்த காயமடைந்த இருவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். புகாரின் பேரில் வழக்கு பதிந்த மீன்சுருட்டி காவல்துறையினா் கோவிந்தசாமியை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...