இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இளைஞரை கத்தியால் குத்தியவா் கைது

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள அங்கராயநல்லூரைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் விஜயகுமாா் (27).

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:09 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள அங்கராயநல்லூரைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் விஜயகுமாா் (27). இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் சண்முகம் (22). இருவருக்கும் வீட்டுமனை தொடா்பாக எல்லைப் பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சண்முகம், விஜயகுமாரை தகாத வாா்த்தைகளால் திட்டி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளாா்.இதனால் பலத்த காயமடைந்த விஜயகுமாா் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புகாரின் பேரில் தா. பழூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.