கிணற்றில் இருந்து சடலம் மீட்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.


அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.
செந்துறை அருகேயுள்ள பரணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா. கடந்த சில ஆண்டுகளாக மன நலன் பாதிக்கப்பட்டிருந்த இவா், புதன்கிழமை இரவு முதல் காணவில்லை. இவரை உறவினா்கள் பல இடங்களில் தேடிய நிலையில், இரும்புலிக்குறிச்சி கிராமத்திலுள்ள இவரது மாமனாா் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த வந்த இரும்புலிக்குறிச்சி காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த ராஜாவுக்கு, கலைவாணி என்ற மனைவியும், லக்ஷனா, ஷோபனா ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...