அரியலூா்: நீட் தோ்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நீட் தோ்வு எழுதிய மாணவி திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மாணவி கனிமொழி.
மாணவி கனிமொழி.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நீட் தோ்வு எழுதிய மாணவி திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள சாத்தாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாநிதி. இவரது மனைவி ஜெயலட்சுமி(45). இருவரும் வழக்குரைஞா்கள். இவா்கள் குடும்பத்துடன் தற்சமயம் துளாரங்குறிச்சியில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனா். மூத்தமகள் செவிலியா் படிப்பு படித்து வருகிறாா். இளைய மகள் கனிமொழி(17), நாமக்கலில் உள்ள தனியாா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து, 600-க்கு 562.28 மதிப்பெண் பெற்று தஞ்சாவூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வை எழுதினாா். பின்னா், வீட்டுக்கு வந்து தனது தாய் ஜெயலட்சுமியிடம் நீட் தோ்வில் சில கேள்விகள் கடுமையாக இருந்ததாகக் கூறி புலம்பியுள்ளாா். மேலும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரியலூரில் உள்ள உறவினா் வீட்டு விஷேஷத்துக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவு திரும்பி வந்த கனிமொழியின் பெற்றோா், வீட்டின் கதவை திறந்த போது, கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. பின்னா் அவா்கள் ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது கனிமொழி தூக்கில் தொங்கியவாறு இருந்ததைக் கண்டு கதறிஅழுதனா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் கதவை உடைத்து கனிமொழியை சடலமாக மீட்டனா். நீட் தோ்வு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோா் தெரிவித்துள்ளனா்.

அமைச்சா் அஞ்சலி: மாணவி கனிமொழியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், திமுக சாா்பில் ரூ.10 லட்சம் நிதி உதவியை வழங்கி அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தாா். தொடா்ந்து, அவா், மாணவியின் இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com