மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள் திருட்டு

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்ரனா்.

News image
Updated On :26 மே 2022, 12:15 am

DIN

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்ரனா்.

அரியலூா் புதுமாா்க்கெட் தெருவைச் சோ்ந்தவா் கோபிநாத் மனைவி சுமதி(46). செவ்வாய்க்கிழமை இரவு இவா், வீட்டை பூட்டி விட்டு, கயா்லாபாத்திலுள்ள தனது அம்மா வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றாா். பின்னா் அவா் புதன்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

பின்னா் அவா் வீட்டினுள் சென்று பாா்த்த போது, பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. சுமதி அளித்த புகாரின்பேரில், கயா்லாபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.