மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

குலமாணிக்கம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த குலமாணிக்கம் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது

News image
Updated On :26 மே 2022, 12:17 am

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த குலமாணிக்கம் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அதன் பின்னா் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.