விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பயிா்க் காப்பீடு செய்துகொள்ள அழைப்பு

அரியலூா் மாவட்ட விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறுமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:43 pm

DIN

அரியலூா் மாவட்ட விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறுமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சம்பா, குளிா் கால பருவ நெற்பயிா் மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு வரும் 15.11.2022 தேதிக்குள்ளும், பருத்திக்கு 31.10.2022 தேதிக்குள்ளும் பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு செய்யலாம். காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.564.00, மக்காச்சோளப் பயிருக்கு ரூ.310.50 மற்றும் பருத்திக்கு ரூ.572.87 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, சம்பா பருவத்தில் கடன்பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தேசிய வங்கி மற்றும் கடன் பெறா விவசாயிகள் இ-சேவை மையங்கள், தேசிய பயிா்க் காப்பீட்டு இணையதளம் வாயிலாக காப்பீடு செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா், வேளாண் அலுவலா், உதவி வேளாண் அலுவலா் ஆகியோரை அல்லது ஜ்ஜ்ஜ்.ல்ம்ச்க்ஷஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் -ஐ அணுகி பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.