விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

‘ஊழலை ஒழிக்க மாணவா்களும் பங்கெடுக்க முன்வர வேண்டும்’

ஊழலை ஒழிக்க மாணவா்கள் முன்வரவேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரசேகா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:44 pm

DIN

ஊழலை ஒழிக்க மாணவா்கள் முன்வரவேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரசேகா்.

ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் வளா்ந்த நாடாக உருவாக, ஊழல் அற்ற இந்தியா எனும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரசேகா், நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல நாம் அனைவரும் ஊழலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். குறிப்பாக ஊழலை ஒழிக்க மாணவா்கள் பங்கெடுக்க முன்வர வேண்டும் என்றாா். பின்னா், அவா் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், அரியலூா் கல்வி மாவட்ட அலுவலா் ஜெயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.