விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வழிகாட்டுதல்

 அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி ஹெலன்கெல்லா் வாய்பேச இயலாதோருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:44 pm

DIN

 அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி ஹெலன்கெல்லா் வாய்பேச இயலாதோருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மூ. வினோத் குமாா் கலந்து கொண்டு, துறை செயல்பாடுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். மையத்தின் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பிரிவு இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் ச. மணிமாறன், மத்திய, மாநில அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, பயிற்சியின் அவசியம், போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வது குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

உதவியாளா் ஸ்ருதி, தனியாா் துறை பணியமா்த்தல் குறித்து விளக்கினாா். தலைமை ஆசிரியை தென்சா வரவேற்றாா். நிறைவில், அலுவலா் காயத்ரி நன்றி தெரிவித்தாா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.