ஒய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்ககட்டடத் தொழிலாளா்கள் கோரிக்கை
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் மாவட்டம், திருமானூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டத்தில், சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்த உறுப்பினா்களுக்கு வீடு கட்டிக் கொள்ள ரூ.4 லட்சம் வழங்க வேண்டும். 5 வயது கடந்த கட்டுமானப் பெண் உறுப்பினா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளா் உறுப்பினா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் கரும்பாயிரம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் முருகேசன், பானுமதி, சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஜீவா, மாவட்டத் தலைவா் ஆறுமுகம் ஆகியோா் கலந்து கொண்டு நவம்பா் 16,17 ஆகிய தேதிகளில் நடைபெறும் சங்க மாநாடு குறித்து விளக்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...