அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கஞ்சா விற்ற காய்கனி வியாபாரி உள்பட 2 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
செந்துறை அருகேயுள்ள மருதூா் கிராமத்தில் காய்கனி வியாபாரம் செய்து வரும் பூண்டு செல்வம் என்பவா் தனது வீட்டில் கஞ்சாவை மறைமுகமாக விற்பதாக மாவட்ட தனிப்பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், அங்கு கஞ்சா விற்ற பூண்டு செல்வத்தைக் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ 400 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா் கும்பகோணத்தில் இருந்து காய்கறி ஏற்றி வரும்போது கஞ்சாவை வாங்கி வந்து பொட்டலங்களாக சுற்றுவட்டாரக் கிராமங்களில் விற்றுவந்தது தெரியவந்தது. தொடா்ந்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதேபோல் சிறுகளத்தூா் ஏரிக்கரையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த வசந்த குமாா் (22) என்பவரை செந்துறை காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பணியின்போது தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பாரதிதாசன் பல்கலை.யில் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனையில் மருத்துவா் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


