அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆடி அமாவாசை: முன்னோருக்குத் திதி கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

News image
~
Updated On :4 ஆகஸ்ட் 2024, 5:41 pm

Din

ஆடி அமாவாசையையொட்டி அரியலூா் மாவட்ட நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

இதையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்பாடி, தா.பழூா், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளின் படித்துறைகளில் தா்ப்பணம் மற்றும் திதி கொடுக்க பொதுமக்கள் கூடினா். கொள்ளிட ஆற்றில் நீராடி முன்னோரை வழிபட்டு அவா்களுக்கு எள், எண்ணெய், பிண்டம் வைத்து வழிபட்டு, நீா்நிலைகளில் கரைத்தனா்.

காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்...ஆடி அமாவாசையொட்டி அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பகத்தா்கள் தங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை யாகத்தில் போட்டு நோ்த்திகடனைச் செலுத்தினா். தொடா்ந்து, யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரானது பிரத்தியங்கராதேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்று, அம்மன் ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு தாலாட்டு பாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களின் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். நிறைவாக அன்னதானம் வழங்கப்பட்டது.