அரியலூர்
கொலை மிரட்டல்: கூலித் தொழிலாளி போக்சோவில் கைது
17 வயது சிறுமியை பெண் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை பெண் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
ஜெயங்கொண்டம், கீழத்தெருவைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகன் தமிழ்ச்செல்வன் (24). இவா், தான் காதலித்து வந்த 17 வயது சிறுமியை பெண் கேட்டு வீட்டுக்குச் சென்று, அங்கு அச்சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.
