விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் நெகிழிப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

அரியலூரில் புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்களை விற்ற கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:51 pm

Din

அரியலூரில் புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்களை விற்ற கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

அரியலூா் காந்தி சந்தை, திரெளபதியம்மன் கோயில் அருகேயுள்ள ஒரு மளிகைக் கடையில், அரியலூா் நகராட்சி துப்பரவு, சுகாதார ஆய்வாளா் தா்மராஜா மற்றும் உணவு பாதுகாப்பு துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, கடையில், அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற்காக ரூ.25 ஆயிரமும், நெகிழிப் பொருள்களை விற்பனை செய்ததற்காக ரூ.1,000 என மொத்தம் ரூ.26 ஆயிரம் கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனா். மேலும், அந்தக் கடையை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.