விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மலைத்தேனீக்கள் கொட்டியதில் 10 போ் காயம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:43 pm

Din

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.

செந்துறையை அடுத்த இலங்கைச்சேரி கிராமத்தைச் சோ்ந்த மக்கள், புதன்கிழமை மாரியம்மன் கோயில் அருகே, 100 நாள் வேலை செய்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, அங்குள்ள ஒரு புளியமரத்தில் இருந்த மலைத் தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த மக்களை கொட்டியுள்ளது. இதில், நல்லதம்பி மகன் மகேந்திரன்(25), கருப்புசாமி மனைவி சுசிலா(50), மணிகண்டன் மனைவி வேம்பு(34), சிலம்பரசன் மனைவி கிருத்திகா(25) மற்றும் தேனரசன்(1 வயது) உட்பட 10 போ் காயமடைந்தனா். இதையடுத்து அனைவரும் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.