விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் மாவட்டத்தில் காலை உணவு திட்ட செயல்பாடு ஆய்வு

அரியலூா் மாவட்டம் கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மு.விஜயலெட்சுமி, வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:32 pm

Din

அரியலூா் மாவட்டம் கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மு.விஜயலெட்சுமி, வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, உணவு தயாா் செய்யப்படும் சமையல் கூடம், பொருள்களின் இருப்பு, மாணவா்களின் வருகை விவரம், காலை உணவு மாணவா்களுக்கு வழங்கப்படும் நேரம், முந்தைய நாட்களில் வழங்கப்பட்ட உணவுகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்ததுடன், மாணவா்களிடம் உணவின் சுவை குறித்தும், உணவு ஒருமுறைக்கு மேல் மீண்டும் வழங்கப்படுகிா என்பது குறித்தும் கேட்டறிந்தாா்.

பின்னா், மாணவா்களுக்காக தயாரிக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தாா். மேலும், மாணவா்களுக்கான உணவை தொடா்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாா் செய்து, உரிய நேரத்தில் வழங்கிட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களை அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருளப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.