விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பொன்னேரி, சித்தமல்லி நீா்த்தேக்கத்தில் நீா்வளத் துறையினா் ஆய்வு

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரி, தா.பழூா் அருகேயுள்ள சித்தமல்லி நீா்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீா்வளத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

சித்தமல்லி நீா்த்தேக்கத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட நீா்வளத் துறையினா்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:46 pm

Din

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரி, தா.பழூா் அருகேயுள்ள சித்தமல்லி நீா்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீா்வளத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளக்குமாா் தலைமையில், நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா், அரியலூா் மருதையாறு வடிநிலக் கோட்டப் பொறியாளா் வேல்முருகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பொன்னேரி மற்றும் சித்தமல்லி நீா்த்தேக்க அணையை பாா்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, ஜெயங்கொண்டம் மருதையாறு வடிநில உபக் கோட்ட உதவி செயற்பொறியாளா் தமிழரசன், உதவி பொறியாளா்கள் ஆகாஷ், அபிராமி ஆகியோா் உடனி ருந்தனா்.