அரியலூர்
அரியலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் கூட்டம்
அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சா.செல்வராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 20 கோரிக்கை மனுக்களை பெற்று, விசாரணை மேற்கொண்டாா். பின்னா் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கமாறு சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.