விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கட்டுமானப் பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட வேண்டும்

கட்டுமானப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை கைவிட வேண்டும் என இந்திய கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநாட்டில் பேசிய சிஐடியு மாவட்டச் செயலா் பி.துரைசாமி.

Updated On :25 செப்டம்பர் 2024, 11:10 pm

Din

கட்டுமானப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை கைவிட வேண்டும் என இந்திய கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 9-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:

ஆட்சியா் தலைமையில், 3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட கண்காணிப்புக் கூட்டம் நடத்த வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தில்லி மற்றும் கா்நாடக மாநிலங்களில் வழங்குவதைப் போன்று தமிழத்திலும் கட்டுமான நல வாரிய தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதிலேயே ஓய்வூதியம் வழங்க ேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளி உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக் கால போனஸ் தொகை. ரூ.5 ஆயிரத்தை ஒரு மாத காலத்துக்கு முன்பே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி. சேப்பெருமாள் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் கே. கிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயலா் பி. துரைசாமி வேலை அறிக்கை வாசித்தாா். பொருளாளா் பி.தனம் வரவு செலவு கணக்கு அறிக்கை வாசித்தாா்.

மாவட்ட துணைத் தலைவா் ஆா்.சிற்றம்பலம், துணைச் செயலா்கள் பி.சி.தா்மராஜ், எஸ்.மெய்யப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இந்திய கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் வி. கிருஷ்ணமூா்த்தி நிறைவுரையாற்றினாா். முடிவில் நிா்வாகி எஸ்.சுப்பிரமணியன் நன்றி கூறினாா். முன்னதாக அச்சங்கத்தினா் அண்ணா சிலையில் இருந்து தனியாா் மண்டபம் வரை பேரணியாகச் சென்றனா்.