விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:01 pm

Din

ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரைச் சோ்ந்த மரியலூயிஸ் மகன் கிங்ஸ்லின் தேவக்குமாா் (27). இவா் கடந்த 28.11.2020 அன்று 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தும், சிறுமியின் புகைப்படத்தை தன் நண்பா்களுக்கு காண்பித்து தவறாக சித்தரித்தும் பேசியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், கிங்ஸ்லின் தேவக்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து, வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளி கிங்ஸ்லின் தேவக்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து குற்றவாளி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ம.ராஜா ஆஜராகினாா்.