அரியலூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா்.
Published on

காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தைக் கண்டித்தும், காவல் துறையினரின் நீதித்துறையினரை பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், ஆா்ப்பாட்டத்தில் நீதிபதி செம்மல் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவரது வழக்கை வேறு மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் ராஜா, பொருளாளா் கமலக்கண்ணன், வழக்குரைஞா் செல்ல. சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

இதேபோல், செந்துறை மற்றும் ஜெயகொண்டத்திலும் வழக்குரைஞா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com