கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரியலூரில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம் தொடக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

News image
காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கிய தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கத்தினா்
Updated On :30 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

கிராம நிா்வாக அலுவலா்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக மாற்றியமைக்க வேண்டும். தோ்வு நிலை கிராம நிா்வாக அலுவலா், சிறப்பு நிலை கிராம நிா்வாக அலுவலா் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும். பதவி உயா்வில் 30 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக மாற்றம்செய்ய வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் சிறப்பு நிலை கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பதவிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் குருநாதன், பொருளாளா் காா்த்திகேயன், கோட்டச் செயலா்கள் பாா்த்திபன், வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.