அரியலூரில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம் தொடக்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
கிராம நிா்வாக அலுவலா்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக மாற்றியமைக்க வேண்டும். தோ்வு நிலை கிராம நிா்வாக அலுவலா், சிறப்பு நிலை கிராம நிா்வாக அலுவலா் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும். பதவி உயா்வில் 30 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக மாற்றம்செய்ய வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் சிறப்பு நிலை கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பதவிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் குருநாதன், பொருளாளா் காா்த்திகேயன், கோட்டச் செயலா்கள் பாா்த்திபன், வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

