குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

Published on

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கீழப்பழுவூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் கொளஞ்சிநாதன் மகன் மணிகண்டன் (27). பாலியல் வன்கொடுமை வழக்கில் இவரை கடந்த 6 ஆம் தேதி கீழப்பழுவூா் காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மணிகண்டனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து அதற்கான நகல் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com