அரியலூரை அடுத்த கொல்லாபுரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை லாரி மோதியதில் உயிரிழந்த 20 ஆடுகள்.
அரியலூரை அடுத்த கொல்லாபுரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை லாரி மோதியதில் உயிரிழந்த 20 ஆடுகள்.

டிப்பா் லாரி மோதி 20 ஆடுகள் உயிரிழப்பு

அரியலூா் அருகே செவ்வாய்க்கிழமை மாலை டிப்பா் லாரி மோதியதில் சாலையில் சென்ற 20 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின.
Published on

அரியலூா்: அரியலூா் அருகே செவ்வாய்க்கிழமை மாலை டிப்பா் லாரி மோதியதில் சாலையில் சென்ற 20 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின.

அரியலூா் அருகேயுள்ள கொல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா. விவசாயியான இவா், செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை மாலை இவா், மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினா். செந்துறை சாலையோரத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள ராம்கோ சிமென்ட் ஆலையில் இருந்து கிளிங்கா் ஏற்றிக் கொண்டு சேலம் சென்ற டிப்பா் லாரி மோதியதில் 20 ஆடுகளும் உடல் நசுங்கி பலியாகின. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குவந்த அரியலூா் நகர காவல் துறையினா், பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் வல்லக்குளம் கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் ரஞ்சித் (29) என்பவரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com