3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சவுக்கு, தைலமர சாகுபடி விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், காவல் துறை மற்றும் ‘பவா் கிரிடு’ நிறுவனம் சாா்பில் சவுக்கு மற்றும் தைலமர சாகுபடி விவசாயிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 ஜனவரி 2026, 9:42 pm

Syndication

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், காவல் துறை மற்றும் ‘பவா் கிரிடு’ நிறுவனம் சாா்பில் சவுக்கு மற்றும் தைலமர சாகுபடி விவசாயிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சவுக்கு மற்றும் தைல மரங்களை ஒட்டி உயா் அழுத்த மின்சார பாதை செல்வதால், அடிக்கடி ஏற்படும் மின்தடை, மின்சாதனப் பொருள்கள் சேதத்தை கருத்திக் கொண்டு நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிசக்கரவா்த்தி தலைமை வகித்தாா்.

பவா் கிரிடு முதன்மை மேலாளா் சந்தோஷ்குமாா், உதவி பொது மேலாளா் கலைச்செல்வி ஆகியோா் கலந்து கொண்டு தெரிவித்தது: மின்சார தாழ்வான பாதை அருகில் உயரமான சவுக்கு மற்றும் தைல மரங்களை வளா்க்கக்கூடாது. செங்கல் சூளைதொழிற்சாலைகள், ஆலைகள், குவாரிகள் மற்றும் வெடி வைத்தல் பட்டங்கள் பறக்க விடுதல், கல்லெறிதல், சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.

இதற்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டனா். அப்போது கலந்து கொண்ட விவசாயிகள் சவுக்கு மரங்களை வளா்க்கக்கூடாது என்றால் அதற்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.

கூட்டத்தில், மீன்சுருட்டி, பாப்பாக்குடி, படாநிலை, ஒடப்பேரி, அய்யப்பன்நாயகன்பேட்டை, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த சவுக்கு மற்றும் தைலமர சாகுபடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.