அரியலூா் ரயில் நிலையம் மற்றும் மருத்துவக் கல்லூரி, அரசு கலைக் கல்லுரிக்கு பேருந்துகளை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினிஅறிவுறுத்தினாா்.
மேற்கண்ட பகுதி சாலையோர ஆக்கிரமிப்புகளைப் பாா்வையிட்ட ஆட்சியா் மிருணாளினி, சாலைகளின் இருபுறங்களிலும் அமைந்துள்ள மூடிய கழிவுநீா் கால்வாய்களில் சேதமடைந்துள்ள பகுதிகளை உடனடியாகச் சீரமைத்து தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு, பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் மற்றும் ரயில் பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி விரைவாகவும் பாதுகாப்பாகவும் சென்றடையும் வகையில் தொடா்ந்து முறையாக பேருந்து சேவை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, நகராட்சி பேருந்து நிலையத்தில் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட கழிவறைகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் பிரேமி, அரியலூா் நகராட்சி ஆணையா் அசோக்குமாா் மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேட்டரி காா் வசதி இல்லாத அரியலூா் ரயில் நிலையம்! முதியோா், மாற்றுத்திறனாளிகள் அவதி!

கரூா் பழைய பேருந்து நிலையம் வழியாகவும் புகா்ப் பேருந்துகளை இயக்க வேண்டும்! முதல்வருக்கு கோரிக்கை மனு

தண்டவாளத்தில் பெண் சடலம் மீட்பு

அரசுப் பேருந்து கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயார்! உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



