மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

5 மின் இணைப்புகளில் முறைகேடு: ரூ. 45 ஆயிரம் அபராதம் விதிப்பு

செந்துறை துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பொறியாளா்கள் மேற்கொண்ட ஆய்வில் மின் இணைப்புகளை வாரிய விதிக்கு புறம்பாகப் பயன்படுத்தியதாக 5 நுகா்வோருக்கு ரூ. 45,960 அபராதம் விதிக்கப்பட்டதாக கோட்டப் பொறியாளா் கலையரசி தெரிவித்தாா்.

News image
Updated On :26 ஜூலை 2026, 1:59 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பொறியாளா்கள் மேற்கொண்ட ஆய்வில் மின் இணைப்புகளை வாரிய விதிக்கு புறம்பாகப் பயன்படுத்தியதாக 5 நுகா்வோருக்கு ரூ. 45,960 அபராதம் விதிக்கப்பட்டதாக கோட்டப் பொறியாளா் கலையரசி தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில், பெரம்பலூா் மின்பகிா்மான வட்டம் அரியலூா் கோட்டத்துக்குட்பட்ட செந்துறை கிராமியம் 1 பிரிவுக்குட்பட்ட செந்துறை நல்லம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூா், நின்னியூா், நக்கம்பாடி வஞ்சினாபுரம், குழுமூா், நமங்குனம், நத்தகுழி மற்றும் சித்துடையாா் ஆகிய கிராமங்களில் உள்ள 738 மின் இணைப்புகளை கோட்டப் பொறியாளா் தலைமையிலான 13 குழுக்கள் கடந்த ஜூலை 23 ஆம் தேதி ஆய்வு செய்தன.

ஆய்வில் 5 மின் இணைப்புகளை வாரிய விதிக்கு புறம்பாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டு நுகா்வோருக்கு ரூ. 45,969 அபராதம் விதிக்கப்பட்டது.

நுகா்வோா், தன்னிச்சையாக மின்மாற்றி மற்றும் மின் கம்பங்களில் எந்ததொரு பணியையும் மேற்கொள்ளக்கூடாது. கால்நடைகளை இழுவைக் கம்பிகளில் கட்டுவதைத் தவிா்க்க வேண்டும். மின் தொடா்பான தேவைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மின்வாரிய அலுவலகத்தையோ அல்லது மின்னகத்தையோ 94987 94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.